பத்மாவதி திரைப்படத்துக்கு நிபந்தனைகளுடன் யு/ஏ சான்றிதழ்

நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலைகளை சம்பாதித்த பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' திரைப்படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு (சிபிஎஃப்சி) யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதற்காக, படத்தின் பெயரை மாற்ற வேண்டும், சில காட்சிகளை நீக்க வேண்டும் என்ற கெடுபிடிகளை தணிக்கைக் குழு விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'பத்மாவதி' என்ற படத்தின் பெயரை 'பத்மாவத்' என மாற்ற வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தை வெளியிட கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தப் படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இதன்காரணமாக 'பத்மாவதி' திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிப்போனது. சென்சார் ஒப்புதல் கிடைக்காததால் டிசம்பர் 1-ம் தேதி வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில், 'பத்மாவதி' திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது மத்திய திரைப்பட தணிக்கைக் குழு.

இதற்காக, தணிக்கைக் குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி, ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்களிடம் வரலாற்று குறிப்புகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விடைகேட்டு தெளிவு பெற்றதாகத் தெரிகிறது.

 

 

'பத்மாவதி' திரைப்படத்தை பிரிட்டனில் வெளியிட கடந்த மாதம் அந்த நாட்டு தணிக்கை வாரியம் முறைப்படி அனுமதித்தது. 12 ஏ என்ற ரேட்டிங்கை அந்நாட்டு திரைப்பட தணிக்கைக் குழு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்