மும்பை: ‘டான்’ மூன்றாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களில் நடித்த ஷாருக்கானுக்கு பதில் இதில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.
1978-ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்து வெளியான படம் ‘டான்’. பெரும் வெற்றி பெற்ற இப்படம் தமிழில் ‘பில்லா’ என்ற பெயரில் ரஜினி நடித்து வெளியானது. இப்படத்தை 2006-ஆம் ஆண்டு ரீபூட் செய்து அதே பெயரில் ஷாருக்கான் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் 2011-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகத்துக்காக அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்காக ஒரு சிறிய அறிவிப்பு டீசர் வெளியாகியுள்ளது. இதில் ஷாருக்கானுக்கு பதில் ரன்வீர் நாயகனாக நடிக்கின்றார். முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஃபர்ஹான் அக்தர் இப்படத்தை இயக்க உள்ளார். அவருடன் இணைந்து புஷ்கர் - காய்த்ரி இப்படத்துக்கு கதை எழுதியுள்ளனர். டீசர் வீடியோவில் அமிதாப், ஷாருக் கூறும் பிரபலமான ‘மெய்ன் ஹூன் டான்’ என்ற வசனத்தை ரன்வீர் சொல்கிறார்.
ஷாருக்கான் இந்தப் பாகத்தில் இல்லை என்றதும் அவரது ரசிகர்கள் படக்குழுவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். #NoSRKNoDon என்ற ஹேஷ்டேகை இந்திய ட்ரெண்ட் செய்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
» “தலைவா யூ ஆர் ஆல்வேஸ் கிரேட்” - ரஜினிக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்
» நாளை ‘ஜெயிலர்’ வெளியாகும் நிலையில் இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago