மும்பை: பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு. இவர் தமிழில் விஜய்யின் சச்சின் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இவர் இந்தி நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த வருடம் பெண் குழந்தைப் பிறந்தது. குழந்தைக்கு தேவி என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை நேகா துபியாவுக்கு, பிபாஷா அளித்த பேட்டியில், தனது குழந்தைக்குப் பிறக்கும் போதே இதயத்தில் 2 துளைகள் இருந்தன என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “ குழந்தை பிறந்து 3 நாட்கள் கழித்து மருத்துவர்கள் இதைச் சொன்னதும் அதிர்ச்சி அடைந்தோம். அறுவைச் சிகிச்சைச் செய்ய வேண்டும் என்றார்கள். தானாகவே அது சரியாகிவிடும் என்று எதிர்பார்த்தோம். ஒரு கட்டத்தில் ‘துளைகள் பெரிதாக இருக்கின்றன. தானாக சரியாக வாய்ப்பில்லை’ என்று மருத்துவர்கள் கூறினார்கள். பிறகு அறுவைச் சிகிச்சைக்குச் சம்மதித்தோம். அந்த வேதனையை விவரிக்க முடியாது. 3 மாதத்திலேயே தேவிக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. இப்போது நலமாக இருக்கிறாள். இது போன்று எந்த தாய்க்கும் நடக்கக் கூடாது” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
44 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago