தென்னிந்திய அலையை தடுத்து நிறுத்தியது ‘பதான்’ - ராம் கோபால் வர்மா கருத்து

By செய்திப்பிரிவு

“இனிமேல் இந்தி படங்கள் வெற்றி பெறாது என்ற கண்ணோட்டத்தை ‘பதான்’ படம் மாற்றியமைத்தது” என இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “தென்னிந்தியாவின் அலையை ‘பதான்’ தடுத்து நிறுத்தியது. தென்னிந்திய திரைப்படங்கள்தான் ஏற்றுக்கொள்ளப்படும்; பாலிவுட் படங்கள் இனி செல்லுபடியாகாது என்ற கண்ணோட்டத்தை இப்படம் மாற்றியமைத்தது. ‘காந்தாரா’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘கேஜிஎஃப்’ படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துக்கொண்டிருந்த நேரம் அது.

ஆனால், இந்த ஆண்டு எந்த தென்னிந்திய படங்களும் இந்தியில் ஹிட்டடிக்கவில்லை. இங்கே வடக்கு தெற்கு என்பதல்ல விஷயம். படம்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. பொருட்களுக்கு லேபிள் இடும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. ஒருவேளை ராஜமவுலி ஒடிசாவிலோ, குஜராத்திலோ பிறந்ததிருந்தாலும் கூட அவர் இந்த மாதிரியான படங்களைத் தான் இயக்கியிருப்பார். நான் தற்போது அரசியல் த்ரில்லர் படம் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறேன். விரைவில் இந்தி படம் ஒன்றை இயக்குவேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்