“நான் செஞ்ச சம்பவம் தனி வரலாறு” - ‘ஜவான்’ முதல் சிங்கிள் வீடியோ எப்படி?

By செய்திப்பிரிவு

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிளான ‘ஜிந்தா பந்தா’ (தமிழில்: வந்த எடம்) பாடல் வெளியாகியுள்ளது

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிளான ‘ஜிந்தா பந்தா’ (தமிழில்: வந்த எடம்) பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்தியில் இர்ஷாத் காமில் எழுத தமிழில் இப்பாடலை விவேக் எழுதியுள்ளார்.

பாடல் எப்படி? - படத்தில் இது ஷாருக்கானுக்கான அறிமுகப் பாடலாக இருக்கலாம். ”வரும்போதே தெரியணும் வர்ற சிங்கம் யாரு... நான் செஞ்ச சம்பவம் தனி வரலாறு” போன்ற பாடலின் வரிகள் அதனை பறைசாற்றுகின்றன. பாடல் முழுக்க வரும் அதிரடியான பீட்டை பார்க்கும்போது அடுத்த சில வாரங்களுக்கு இப்பாடல் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களில் ட்ரெண்ட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை. ‘வந்த எடம்’ பாடல் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்