மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கான தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்.7-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தில் நயன்தாராவின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், இன்று (ஜூலை 24) படத்தின் வில்லன் விஜய் சேதுபதியின் தோற்றம் வெளியாகியுள்ளது. இதில் அவருக்கான கேப்ஷனாக டீலர் ஆஃப் டெத் (மரணத்தின் வியாபாரி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago