இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியிடம் “நீங்கள் மனிதராக இருந்தால் மணிப்பூர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்குங்கள்” என நெட்டிசன் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார். அந்த ஆண்டில் பாலிவுட்டில் அதிகபட்ச வசூலை குவித்த இப்படம் காஷ்மீரில் பண்டிட்டுகள் வெளியேற்றம் குறித்து பேசியது. சர்ச்சைகளை எதிர்கொண்ட இப்படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘KashmirUNREPORTED’ என்ற டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது.
இந்த வீடியோவில் கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், “நேரத்தை வீணடிக்காதீர்கள். நீங்கள் மனிதராக இருந்தால், ‘மணிப்பூர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்குங்கள்” என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள விவேக் அக்னிஹோத்ரி, “என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. எல்லா படத்தையும் நான் மட்டும் தான் எடுக்க வேண்டுமா? உங்கள் டீம் இந்தியாவில் யாரும் இயக்குநர் இல்லையா?” எனப் பதிவிட்டுள்ளார். அதாவது 2024 தேர்தலையொட்டி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக I-N-D-I-A என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இதனை மையப்படுத்தி விவேக் அக்னிஹோத்ரி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
» சூர்யாவின் ‘கங்குவா’ கிளிம்ப்ஸ் வீடியோ நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியீடு
» விஜய்யின் ‘லியோ’ படத்துடன் மோதும் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த்கேசரி’
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago