IMDB வெளியிட்ட டாப் 10 இந்தியப் படங்கள் - ‘பதான்’ முதலிடம்; ‘வாரிசு’ 9ஆம் இடம்

By செய்திப்பிரிவு

மும்பை: ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ள இந்திய அளவிலான டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் ‘பதான்’ முதலிடமும் ‘வாரிசு’ ஒன்பதாம் இடமும் பிடித்துள்ளன.

உலக அளவில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் ஐஎம்டிபி இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் டாப் 10 படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சில தினங்களுக்கு முன்பு 2023ஆம் ஆண்டு வெளியானதில் உலக அளவில் கவனம் ஈர்த்த திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டிருந்தது. இதில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி நடித்திருந்த ‘ஃபார்ஸி’ தொடர் இரண்டாம் இடம் பிடித்திருந்தது.

இந்த நிலையில் இந்திய அளவில் பிரபலமான டாப் 10 திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘பதான்’ முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ படம் உள்ளது. மூன்றாவது இடத்தை ‘தி கேரளா ஸ்டோரி’ படம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் 9வது இடத்திலும், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ 10வது இடத்திலும் உள்ளன.

ஐஎம்டிபி டாம் 10 திரைப்படங்கள் பட்டியல்:

1) பதான்
2) கிஸி கா பாய் கிஸி கி ஜான்
3) தி கேரளா ஸ்டோரி
4) து ஜூத்தி மெய்ன் மக்கார்
5) மிஷன் மஜ்னு
6) சோர் நிக்கல் கே பாகா
7) ப்ளடி டாடி
8) சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹே
9) வாரிசு
10) பொன்னியின் செல்வன் 2

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

38 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்