ஹிருத்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ ஜனவரியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் ‘ஃபைட்டர்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் முதல் தோற்றமும் வெளியாகியுள்ளது.

தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்துக்குப் பிறகு நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘ஃபைட்டர்’. ‘வார்’, ‘பதான்’ படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். தீபிகா படுகோனே, அனில்கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை விஷால் சேகர் இசையமைக்கிறார்.

ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படம் 2024-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் நடிப்பில் இந்தாண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியான ‘பதான்’ ரூ.1000 கோடி வசூலை ஈட்டியது. அதேபோல அடுத்த ஆண்டு அதேநாளில் ஹிருத்திக் ரோஷனின் ‘பைட்டர்’ வெளியாக உள்ளது பாலிவுட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்