‘ராஞ்சனா’ இயக்குநருடன் கைகோக்கும் தனுஷ் - ‘Tere Ishk Mein’ பட அறிவிப்பு வீடியோ 

By செய்திப்பிரிவு

நடிகர் தனுஷ் ‘ராஞ்சனா’ படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் மீண்டும் இணையும் புதிய படத்துக்கு ‘‘Tere Ishk Mein’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘ராஞ்சனா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தில் சோனம் கபூர் நாயகியாக நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆனந்த் எல்.ராய் - தனுஷ் காம்போவில் 2021-ம் ஆண்டு வெளியானது ‘அட்ராங்கி ரே’. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் கைகோக்கிறார் தனுஷ்.

‘Tere Ishk Mein’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஹிமான்ஷூ ஷர்மா படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் தனுஷ் கையில் பெட்ரோல் குண்டுடன் ஓடி வர பின்னணியில் அவரது குரல் ஒலிக்கிறது. “இந்த முறை ஷங்கரை எப்படி தடுத்து நிறுத்துவீர்கள்?” என்ற கேள்வியுடன் வீடியோ முடிவடைகிறது. இதன் மூலம் இப்படம் ‘ராஞ்சனா’ படத்தின் சீக்வலாக உருவாக உள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘ராஞ்சனா’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்