எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலி: வசூலில் பின்தங்கும் ‘ஆதிபுருஷ்’

By செய்திப்பிரிவு

‘ஆதிபுருஷ்’ படத்தின் மீதான சர்ச்சை மற்றும் எதிர்மறை விமர்சனங்களின் எதிரொலியாக நேற்று (ஜூன் 19) இந்திய அளவில் வெறும் ரூ.20 கோடியை மட்டுமே வசூலித்து பின்தங்கியுள்ளது.

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படம் முதல்நாள் ரூ.140 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இரண்டாவது நாளில் ரூ.240 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. மூன்று நாட்களையும் சேர்த்து உலக அளவில் ரூ.340 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் வசனங்கள் குறித்த சர்ச்சையும் ஒருபுறமும், எதிர்மறை விமர்சனங்கள் மறுபுறமும் எழுந்த நிலையில் நேற்று (ஜூன் 19) படம் இந்திய அளவில் ரூ.20 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அளவில் முதல் நாள் ரூ.86 கோடி, 2-வது நாள் ரூ.65 கோடி, 3-வது நாள் ரூ.69 கோடி என வசூலித்த படம் நேற்று வெறும் ரூ.20 கோடியை வசூலித்து பெரும் சரிவை சந்தித்துள்ளது. இப்படம் கடந்த 4 நாட்களில் படம் ரூ.375 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE