பிரபல நடிகையின் பயோபிக்கில் ஊர்வசி ரவுதெலா

By செய்திப்பிரிவு

பிரபல இந்தி நடிகை பர்வீன் பாபி. கடந்த 1973-ம் ஆண்டு வெளியான ‘சரித்ரா’ என்ற இந்தி படத்தில் கிரிக்கெட் வீரர் சலீம் துரானியுடன் அறிமுகமானார். தொடர்ந்து தீவார், அமர் அக்பர் அந்தோணி, சுஹாக், ஷான், காலியா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 70 மற்றும் 80-களில் இந்தி திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த பர்வீன் பாபி, அப்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த இவர், கடந்த 2005-ம் ஆண்டு 50-வது வயதில், தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவர் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. அதில் ஊர்வசி ரவுதெலா நடிக்கிறார். இவர் தமிழில், ‘லெஜண்ட்’ படத்தில் நாயகியாக நடித்தவர். தீரஜ் மிஸ்ரா இந்த பயோபிக் கதையை எழுதியுள்ளார். வாசிம் எஸ்.கான் இயக்குகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்