“படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட்; வேற மாதிரி இருக்கும்” - ‘மாமன்னன்’ குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ்

By செய்திப்பிரிவு

சென்னை: “படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக நடித்துள்ளேன்; நீங்கள் நினைப்பதை விட படம் வேற மாதிரி இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும்” என நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’ படம் குறித்து பேசியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்குவதற்கு முன்பு பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், “நீண்ட நாள் கழித்து தமிழில் எனக்கு ஒரு ரிலீஸ். பெரிய டீமுடன் வேலை பார்த்திருக்கிறேன். படம் வேற மாதிரி இருக்கும். படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட். வித்தியாசமான படமாக எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

பொதுவான ஒரு விஷயத்தைப்பற்றி தான் பேசியுள்ளோம். எல்லோராலும் கனெக்ட் பண்ண முடியும். ஃபஹத் பாசிலுடன் எனக்கு காம்பினேஷன் குறைவு. உதயநிதி, வடிவேலுவுடன் இணைந்து நடித்தது ஜாலியாக மகிழ்ச்சியாக இருந்தது. நிறைய டேக் போனோம். நிறைய சிரித்துக்கொண்டே இருந்தோம். ஜாலியான பயணமாக இருந்தது. ஆனால் படம் அப்படியிருக்காது. சீரியஸான படமாக இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE