பிரபு தேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படப்பணிகள் பூஜையுடன் தொடக்கம்

By செய்திப்பிரிவு

பிரபு தேவா நாயகனாக நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் படப்பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

‘பகீரா’ படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படம் ‘பேட்ட ராப்’. புளூ ஹில் ஃபிலிம்ஸ் சார்பில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படத்தை மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். காமெடி கலந்து கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடிக்கிறார்.

ஜூன் 15-ம் தேதி புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் படத்தின் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இந்தாண்டு இறுதியில் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்