‘மின்னல் முரளி’யின் காப்பியா ஹிப் ஹாப் ஆதியின் ‘வீரன்’? - படக்குழு வெளியிட்ட வீடியோ

By செய்திப்பிரிவு

ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள ‘வீரன்’ சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள நிலையில், இது ‘மின்னல் முரளி’ படத்தின் காப்பியா? என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வந்தனர். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

'சிவகுமாரின் சபதம்', 'அன்பறிவு' படங்களைத் தொடர்ந்து 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடிக்கும் புதிய படம் 'வீரன்'. ‘மரகதநாணயம்’ இயக்குநர் சரவணன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். 'ஹிப் ஹாப்' ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் டி.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னராக படம் உருவாகியுள்ளது.

இதனிடையே, இந்தப் படம் பசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘மின்னல் முரளி’ மலையாளப் படத்தின் காப்பியா என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஜூன் 2-ம் தேதி ‘வீரன்’ திரைக்கு வரும் நிலையில், இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நேரடியாக ‘மின்னல் முரளி’ படத்தின் இயக்குநர் பசில் ஜோசப்புக்கு வீடியோ கால் செய்து அவரிடமே விளக்கம் பெற்று வெளியிடப்பட்டுள்ளது. ஜாலியாக உருவாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்