அண்மையில் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ தனது 79-வது வயதில் 7-வது குழந்தைக்கு தந்தையானார். அவரைத் தொடர்ந்து, தற்போது நடிகர் அல் பசினோ தனது 83-வது வயதில் 4-ஆவது குழந்தைக்கு தந்தையாக உள்ளார். ‘காட் ஃபாதர்’ படத்தில் இணைந்து நடித்த இருவரும் தற்போது மீண்டும் ஃபாதர் ஆகியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர் அல் பசினோ. ‘காட் ஃபாதர்’ படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் கவனம் பெற்றவர், ‘தி ஐரீஷ் மேன்’, ‘சென்ட் ஆஃப் ஏ வுமன்’, ‘ஜாக் அன்ட் ஜில்’, ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார்.
அல் பசினோவுக்கு 22 வயதில் இரட்டையர்களும், 33 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது 29 வயதான நூர் அல்ஃபல்லா என்பவருடன் வாழ்ந்து வரும் அல்பசினோ விரைவில் 4-ஆவது குழந்தைக்கு தந்தையாக உள்ளார். நூர் அல்ஃபல்லா (Alfallah) 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அல் பசினோவும், அல்ஃபல்லாவும் கரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் ஒருவரையொருவர் சந்தித்து காதல் வயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இரண்டு முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற ராபர்ட் டி நீரோ (79) தனக்கு சமீபத்தில் ஏழாவது குழந்தை பிறந்ததை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago