சைக்கோ கொலையாளியும், க்ரைம் கதையும்... - அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள ‘போர் தொழில்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

சரத்குமார், அசோக் செல்வன் இணைந்து நடித்துள்ள படம் ‘போர் தொழில்’. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் , நிகிலா விமல் நாயகியாக நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, இப்படம் வரும் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - விநோதமான கொலைகளை செய்து வரும் சைக்கோ கொலையாளியை சரத்குமாரும், அசோக் செல்வனும் இணைந்து தேடுகின்றனர். இதில் சரத்குமார் - அசோக் செல்வன் இடையே இருக்கும் சில முரண்களும் ஒரு லேயராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. க்ரைம் படங்களுக்கே உண்டான கொடூர கொலைகள் இந்த ட்ரெய்லரிலும் இடம்பெற்றுள்ளன. ‘கொலகாரன் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சிக்கணும்னா அவன் பண்ண கொலைகள படிக்கணும்’ என வசனமும், க்ரைம் படங்களுக்கு உண்டான டெம்ப்ளேட் காட்சிகள் அடங்கிய ட்ரெய்லர் கவனம் ஈர்க்கிறது. திரைக்கதையில் புதுமை சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை பொறுத்து ‘போர் தொழில்’ ரசிகர்களிடையே வரவேற்பை பெறும். ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்