சிறந்த நடிகர் ஹ்ரித்திக்; சிறந்த இயக்குநர் ஆர்.மாதவன்: IIFA 2023 வெற்றியாளர்கள் முழு பட்டியல்

By செய்திப்பிரிவு

அபுதாபியில் நடைபெற்ற IIFA விருது நிகழ்ச்சியில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ஆர்.மாதவனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) சார்பில் நடக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன. இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிசேக் பச்சன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான, சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், அனில் கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களின் முழுமையான பட்டியலை கீழே காணலாம்:

* சிறந்த திரைப்படம்: த்ரிஷ்யம் 2 (இந்தி)

* சிறந்த நடிகர் : ஹ்ரித்திக் ரோஷன் (விக்ரம் வேதா)

* சிறந்த நடிகை: ஆலியா பட் (கங்குபாய் கத்தியாவாடி)

* சிறந்த இயக்குநர்: ஆர்.மாதவன் (ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்)

* சிறந்த துணை நடிகர்: அனில் கபூர் (ஜக் ஜக் ஜீயோ)

* சிறந்த துணை நடிகை: மௌனி ராய் (பிரம்மாஸ்திரா: பாகம் 1)

* சினிமா ஆடை வடிவமைப்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது: மனிஷ் மல்ஹோத்ரா

* இந்திய சினிமாவில் சிறந்த சாதனைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது: கமல்ஹாசன்

* சிறந்த தழுவல் திரைக்கதை: ஆமில் கீயான் கான் மற்றும் அபிஷேக் பதான் (த்ரிஷ்யம் 2)

* சிறந்த ஒரிஜினல் கதை: பர்வேஸ் ஷேக் மற்றும் ஜஸ்மீத் ரீன் (டார்லிங்ஸ்)

* பிராந்திய சினிமாவில் சிறந்த சாதனைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது: ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா (வேத்)

* சிறந்த அறிமுக நடிகர்: ஷாந்தனு (கங்குபாய்) மற்றும் பாபில் கான் (காலா)

* சிறந்த அறிமுக நடிகை: கவுஷாலி குமார் (தோகா அரவுண்ட் தி கார்னர்)

* சிறந்த பின்னணி பாடகி: ஷ்ரேயா கோஷல் (ரங் ரஸியா - பிரம்மாஸ்திரா)

* சிறந்த பின்னணி பாடகர்: அர்ஜித் சிங் (கேஸாரியா - பிரம்மாஸ்திரா)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE