தெலுங்கு நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு ‘தி இந்தியா ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் ராம்சரண், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வி மெகா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கினார். இந்த நிறுவனம் தற்போது, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ ஆகிய படங்களை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறது.
பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இப்படத்துக்கு ‘தி இந்தியா ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நிகில் சித்தார்த்தா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ராம் வம்சி கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்க இருக்கிறது. சாவர்க்கரின் பிறந்தநாளான இன்று (மே 28) இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ ஆகிய இரு படங்களுமே வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago