நடிகை அஞ்சலி நடிக்கும் 50-ஆவது படத்திற்கு ‘ஈகை’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான ‘கற்றது தமிழ்’ படத்தில் மூலம் தமிழ் சினிமாவின் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. ‘ஆனந்தி’ கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு கவனம் பெற்றது. தொடர்ந்து ‘அங்காடி தெரு’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அஜித்தின் ’மங்காத்தா’, சூர்யாவின் ’சிங்கம் 2’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜிக்குப்பிறகு தமிழில் அவர் நடிப்பில் 2 ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘இரட்ட’ படத்தில் நடித்திருந்தார். அஞ்சலி திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது 50-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஈகை’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை க்ரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
» மலையாள சினிமாவில் ரூ.150 கோடி வசூலித்த முதல் படம்: டோவினோவின் ‘2018’ சாதனை!
» “நான் பயந்த பெண்ணாக இருந்தேன்” - தனது கடந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரியங்கா சோப்ரா
படத்தை அசோக் வேலாயுதம் இயக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். தரண் குமார் இசையமைக்கிறார். படத்தின் பாடல்களை அறிவு எழுதுகிறார். இந்நிலையில், தற்போது படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. சுற்றி குடைகள் குழுமியிருக்க நடிகை அஞ்சலி தலையில் முக்காடுடன் திரும்பி பார்ப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago