மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜிகு ஜிகு ரயில்’ வெளியானது.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசிலுடன் இப்படத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் கடந்த 19-ம் தேதி வெளியானது. யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியிருந்த இந்தப் பாடலை பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான ‘ஜிகுஜிகு ரயில்’ பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் தற்போது வெளியாகியுள்ளது. Reggae பாணியில், பாப் மார்லி பாடல்களை நினைவூட்டும் இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியது மட்டுமின்றி இதன் லிரிக்கல் வீடியோவில் நடனமும் ஆடியிருக்கிறார்.
» இரண்டாவது திருமணம் செய்தது ஏன்? - மனம் திறந்த ஆஷிஷ் வித்யார்த்தி
» திடீர் உடல்நலக்குறைவு - ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநர் சுதிப்டோ சென் மருத்துவமனையில் அனுமதி
நீ புறப்பட்டு வா
சரியான சரித்திரம் படைத்திட வா
முன்பகை விட்டு வா
சரிசம உலகினில் மகிழ்ந்திட வா
வீண் திரை விட்டு வா
ஒளிதரும் முகங்களில் பளிச்சிட வா
என்ற யுகபாரதியின் வரிகள் சிலிர்க்க வைக்கின்றன.
வரும் ஜூன் 1ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘மாமன்னன்’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘ஜிகு ஜிகு ரயில் ‘பாடலின் லிரிக்கல் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago