13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா

By செய்திப்பிரிவு

சென்னை: ரஹ்மான் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கிறார் பாவனா.

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பாவனா. தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் அறிமுகமான பாவனா ‘தீபாவளி’, ‘ஜெயம்கொண்டான்’, ‘அசல்’, ‘கூடல்நகர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அஜித்துடன் அவர் நடித்த ‘அசல்’ தான் தமிழில் அவர் நடித்த கடைசிப் படம். அதன் பிறகு தமிழில் அவர் தலைகாட்டவில்லை.

இந்த நிலையில், ரஹ்மான் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கிறார் பாவனா. புதுமுக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஹ்மான் நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொச்சியில் நடந்து வருகிறது. இப்படத்தில் பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார்.

ஏபிகே சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்