நடன இயக்குநர் சதிஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
அண்மையில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கவினின் நடிப்பு பாராட்டப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் கவின் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்தப் படத்தை பிரபல நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார். ‘அயோத்தி’ படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்க உள்ளார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். கவின் படத்துக்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவளராக ஹரீஷ் மற்றும் எடிட்டராக ஆர்.சி.பிரனவ் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago