வடகிழக்கு மாநில சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தவரும் சக பயணியுமான சுகத் சத்பதி என்பவருக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபள்யூ பைக்கை நடிகர் அஜித்குமார் பரிசளித்துள்ளார்.
பைக் ரைடில் ஆர்வம் காட்டும் அஜித் நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அடுத்த கட்டமாக நவம்பர் மாதம் மிகப்பெரிய சுற்றுப்பயணம் ஒன்றையும் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது சக பயணி ஒருவருக்கு அவர் அதிக விலைமதிப்புடைய பைக் ஒன்றை பரிசளித்துள்ள சம்பவம் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. நடிகர் அஜித்துடன் நேபாளம், பூடான் சுற்றுப்பயணத்திற்க அவர் உடன் சென்றவர் சுகத் சத்பதி. அஜித்தின் நேபாளம் சுற்றுபயணத்தை இவர் தான் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சுகத் சத்பதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபள்யூ பைக் ஒன்றை அவருக்கு பரிசளித்துள்ளார். அஜித்தின் நேபாளம் பைக் டூர் கடந்த மே 6-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தனக்கு பைக் வாங்கி கொடுத்திருந்ததை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் சுகத்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் உண்மையில் அதிர்ஷ்டசாலி. தமிழ் திரையுலகின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரும், ஆர்வமுள்ள பைக் ரைடருமான அஜித்குமாருடன் தொடர்பு கிடைத்தது எனக்கான பாக்கியம். நான் அவருக்காக முழுமையான வடகிழக்கு மாநில சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தேன். மேலும், அவருடன் டியூக் 390 வண்டியில் பயணம் செய்தேன்.
» “அரங்கம் அதிர பின்னணியில நம்ம குரல்” - தோனி என்ட்ரி குறித்து சிலாகித்த அருண்ராஜா காமராஜ்
» “மனிதத்தன்மையற்ற தருணம்” - இயக்குநர் மீது நடிகை பிரியங்கா சோப்ரா பகிரங்க குற்றச்சாட்டு
நேபாளம் மற்றும் பூடானுக்கு மேலும் ஒரு சுற்றுபயணத்தை (உலக அளவிலான டூர் பயணத்தின் ஒரு பகுதி) என்னுடன் மேற்கொள்ள இருப்பதாக அவர் உறுதியளித்தார். இந்தப்பயணத்தை நாங்கள் மே 6-ம் தேதி முடித்தோம். இந்த பயணம் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கினோம். நம்ப முடியாத தூரம் பயணம் செய்தோம். பல அழகான சூரிய அஸ்தமனங்களையும் சூரிய உதயங்களையும் கண்டோம்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “பயணத்தில் நல்ல மனிதர்களை சந்திப்பீர்கள் எனக் கூறுகிறார்கள். நான் சிறந்த மனிதனை சந்தித்துள்ளேன். எல்லையற்ற புகழை கொண்டிருந்தாலும், அவரின் அந்த பணிவைக்கண்டு வியப்படைந்தேன். அந்த சூப்பர்ஸ்டாருக்குப் பின்னால் ஒரு எளிய மனிதர் இருக்கிறார். அவர் வாழ்க்கையை பெரிய அளவில் வாழ விரும்புகிறார். பெரிய அளவில் என்பது ஆடம்பரத்தை அல்ல, மன அமைதியை குறிப்பிட்டேன். இந்த F850gs பைக்கை அவர் எனக்கு பரிசளித்தார். இது மோட்டார் சைக்கிள் என்பதை கடந்து மிகப்பெரிய பொக்கிஷம் எனக்கு. நிறைய அன்புகளும் நன்றிகளும் அண்ணா. அவர் பெரிய அளவில் யோசிக்காமல் உடனே இதை வாங்கி கொடுத்தார்” என பதிவிட்டுள்ளார்.\
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago