“அரங்கம் அதிர பின்னணியில நம்ம குரல்” - தோனி என்ட்ரி குறித்து சிலாகித்த அருண்ராஜா காமராஜ் 

By செய்திப்பிரிவு

“ஒட்டுமொத்த அரங்கும் அதிரும்போது பின்னணி இசையில நம்ம குரல் வரும் போது … ப்பபா… நேர்ல போய் கத்தியிருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது” என நேற்றைய ஆட்டத்தில் தோனி மைதானத்திற்குள் நுழையும் போது ஒலித்த பாடல் குறித்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் சிலாகித்து பதிவிட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் ப்ளே ஆஃப் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றிபெற்று, நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே பேட்டிங்கின்போது ரஹானே விக்கெட்டான பிறகு களத்திற்கு வந்தார் தோனி. அவர் மைதானத்திற்குள் நுழையும்போது, ரஜினியின் ‘கபாலி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நெருப்புடா நெருங்குடா பாப்போம்’ பாடல் பின்னணியில் ஒலித்தது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இந்தப்பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடியிருந்தார். இந்நிலையில் அவரது பாடல் தோனி மைதானத்தில் நுழையும்போது ஒலிபரப்பப்படத்தற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேர்ல பாக்கலயேங்கற ஒரு சிறு குறை உள்ளுக்குள்ள இருந்தது, ஆனா அது இப்ப இல்ல.. ஒட்டு மொத்த அரங்கும் அதிரும்போது பின்னணி இசையில நம்ம குரல் வரும் போது … ப்பபா… நேர்ல போய் கத்திருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது .. நன்றி இந்த காட்சிய காண வைத்த அனைவருக்கும்…” எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE