புற்றுநோயால் பாதித்த ரசிகையை வீடியோ காலில் நெகிழவைத்த ஷாருக்கான் - மருத்துவ உதவிக்கும் உறுதி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அவரிடம் வீடியோகாலில் பேசியுள்ள நடிகர் ஷாருக்கான், மருத்துவ செலவுகளையும் ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள கர்தா பகுதியைச் சேர்ந்தவர் 60-வது வயதான ஷிவானி. ஷாருக்கானின் தீவிர ரசிகையான இவர் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். தன் வாழ்நாளில் ஒருமுறையாவது ஷாருக்கானை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையை கொண்ட ஷிவானிக்கு வீடியோ கால் செய்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. வீடியோ காலில் 40 நிமிடங்கள் வரை பேசியுள்ள ஷாருக்கான், மருத்துவத்துக்கு தேவையான செலவை ஏற்றுக்கொள்வதாகவும் ஷிவானியிடம் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஷிவானியின் மகள் ப்ரியா கூறும்போது, “என் தாயார் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஷாருக்கான் தெரிவித்தார். மேலும், அவர் என்னுடைய திருமணத்திற்கு வருவதாகவும், கொல்கத்தாவில் உள்ள வீட்டிற்கு நேரில் வருவதாகவும் கூறினார். அப்போது, தனக்கு முள் இல்லாத மீன் குழம்பை சமைத்து தர வேண்டும் என்றும் சொன்னார்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஷாருக்கான் தன் ரசிகை ஒருவருக்காக 40 நிமிடங்கள் வரை செலவழித்து பேசியது மற்றும் மருத்துவ செலவை ஏற்பதாக உறுதியளித்திருப்பது குறித்த செய்தி அறிந்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்