பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்சநேகர், டெர்மினேட்டர் வரிசை படங்களில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘தி டெர்மினேட்டர்’ படம் 1984-ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக, ‘டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே’ 1991-ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. பின்னர், ‘டெர்மினேட்டர் 3: ரெய்ஸ் ஆப் தி மெஷின்ஸ்’ 2003-ம் ஆண்டில் வெளியாகி, அதுவும் சூப்பர் ஹிட்டானது. அதற்கடுத்து வந்த இந்த வரிசை படங்கள் வரவேற்பை பெறவில்லை. அதனால், டெர்மினேட்டர் வரிசை படங்களில் இருந்து விலகி விட்டதாக நடிகர் அர்னால்ட் தெரிவித்துள்ளார்.
“என் வெற்றிக்கு ‘டெர்மினேட்டர்’ மிகப் பெரிய காரணம். முதல் மூன்று வரிசை படங்கள் சிறப்பாக சென்றன. நான்காவது படத்தில், நான் கலிஃபோர்னியா மாகாண ஆளுநராக இருந்ததால் நடிக்கவில்லை. ஐந்து மற்றும் ஆறாவது வரிசை படங்கள் என்னை பொருத்தவரை சரியாக ஓடவில்லை. அவை சரியாக எழுதப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். இந்த படங்களில், சாரா கானர் பாத்திரத்தில் நடித்த லிண்டா ஹாமில்டனும், இனி வரும் டெர்மினேட்டர் படங்களில் நடிக்க மாட்டேன் என்று ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago