பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய மாளவிகா மோகனனிடம் ‘தங்கலான்’ பற்றி கேட்டனர். அதற்கு பதில் அளித்த மாளவிகா, “அழகான படமாக ‘தங்கலான்’ உருவாகி வருகிறது. தனித்துவமான உலகை உருவாக்குகிறோம். இதன் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நடக்க இருந்தது. ஒத்திகையின்போது விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் குணமடைந்ததும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். இப்படம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்கு கடினமாக இருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் நடிகர் விக்ரம் எனக்கு உதவியாக இருந்தார். சுயநலம் இல்லாத அவர், தன்னைச் சுற்றி உள்ளவர்களை நன்றாக கவனித்துக் கொள்வார். சக நடிகர்களை ஊக்கப்படுத்துவார். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு, வேற லெவல்’’ என்று தெரிவித்துள்ளார். பிரபாஸுடன் நடிக்கும் படம் பற்றி கேட்டபோது, “அந்தப் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறேன். அதில் ஜாலியான பெண்ணாக நடிக்கிறேன். படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago