பொறி பறக்கும் ஆக்ஷன், பஞ்சமே இல்லாமல் ரொமான்ஸ் காட்சிகள், கிச்சுகிச்சு மூட்டும் காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் வெளியாகியுள்ளது சித்தார்த்தின் ‘டக்கர் ட்ரெய்லர்’.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு நடித்துள்ள ‘டக்கர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை திவ்யான்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒருவழியாக இப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ட்ரெய்லர் எப்படி? : நாயகனின் லட்சியம் என்ன என்பதை ட்ரெய்லரின் வரும் முதல் வசனமே உணர்த்தி விடுகிறது. வறுமையான சூழலில் இருக்கும் சித்தார்த் பல வேலைகள் செய்வதாக காட்டப்படுகிறது. காமெடிக்கு யோகிபாபு, ரொமான்ஸுக்கு திவ்யான்ஷா, வில்லத்தனத்துக்கு அபிமன்யு சிங் என பக்கா கமர்ஷியல் மசாலா படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இதுவரை சாக்லேட் பாயாக வலம்வந்த சித்தார்த் முழு ரக்கட் பாயாக களமிறங்கியிருக்கிறார். ட்ரெயலரில் காட்டப்படும் பரபர ஆக்ஷன், ரொமான்ஸ் காட்சிகளைத் தாண்டி திரைக்கதையிலும் ‘டக்கர்’ ஈர்க்கிறதா என்பதை ஜூன் 9ஆம் தேதி பார்க்கலாம்.
‘டக்கர்’ ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago