நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து தனது மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தில், கவுரவத் தோற்றத்தில் நடித்து வருகிறார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறு வேடத்தில் நடித்துள்ளார். அடுத்து லைகா தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.
அதற்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் அது ரஜினியின் கடைசிப் படமாக இருக்கலாம் என்றும் இயக்குநர் மிஷ்கின் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதுபற்றி ரஜினியின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் அகமதுவிடம் கேட்டபோது, “யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம். ஆனால், கடைசிப் படமா, இல்லையா என்பதை ரஜினி சார் மட்டுமே முடிவு செய்ய முடியும். இன்னும் சில படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago