பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த கேலி: நடிகை கீர்த்தி ஷெட்டி பதிலடி

By செய்திப்பிரிவு

முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டது தொடர்பாக நெட்டிசன்களின் கிண்டல்களுக்கு நடிகை கீர்த்தி ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. ‘உப்பெனா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கஸ்டடி’ படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கடந்த சில நாட்களாகவே கீர்த்தி ஷெட்டி முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கடுமையான ட்ரோல் செய்து வந்தனர். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள கீர்த்தி ஷெட்டி, ‘இதுபோன்ற விமர்சனங்களுக்குப் பின்னால் உள்ள உள்நோக்கம் புரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

“சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் ஏன் எதிர்மறை கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன்? அவர்களின் கோபத்துக்கு என்ன காரணம்? விமர்சனத்தில் பாசிட்டிவிட்டி இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லை. நடிகர்களின் குடும்பத்தினர் குறித்து சிலர் வேண்டுமென்றே வதந்திகளை உருவாக்குகின்றனர். அப்படிச் செய்வதால் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது?

சமீபத்தில் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். அதை வைத்து என் முகம் ’உப்பெனா’ படத்தில் இருந்தது போல் இல்லை என்று கூறுகிறார்கள். சிகை அலங்காரம், மேக்கப் ஆகியவற்றால் முகத்தில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான். மேலும், வயது அதிகரிக்கும் போதும் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன”

இவ்வாறு கீர்த்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்