மும்பை: ‘வார் 2’ படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கவிருப்பதை பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது பிறந்தநாள் வாழ்த்துப் பதிவில் உறுதி செய்துள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷனின் ‘வார் 2’ படத்தில் ஜூனியர் என்டிஆர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘வார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். எனினும் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜூனியர் என்டிஆருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஒரு வித்தியாசமான வாழ்த்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தாரக். இந்த நாள் மகிழ்ச்சியாகவும், வரும் ஆண்டு ஆக்ஷன் நிறைந்ததாகவும் அமைய வாழ்த்துகிறேன். யுத்தபூமியில் உங்களுக்காக காத்திருக்கிறேன் நண்பா. உங்கள் நாள் மகிழ்வும், அமைதியும் நிறைந்திருக்கட்டும்.. நாம் சந்திக்கும்வரை” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் ‘வார் 2’ படத்தில் ஜூனியர் என்டிஆர் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
» துபாய் தொழிலதிபரை கரம்பிடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?
» கேன்ஸ் 2023 | இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்துக்கு கண்ணீர் மல்க விடைகொடுத்த ஹாரிஸன் ஃபோர்டு
தற்போது ஜூனியர் என்டிஆர், கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜான்விகபூரின் தெலுங்கில் அறிமுகமாகும் ‘தேவரா’ படத்தில் நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago