துபாய் தொழிலதிபரை கரம்பிடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?

By செய்திப்பிரிவு

துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஃபர்ஹான் பின் லியாகத் என்பவரை நடிகை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் நிச்சயிக்கப்பட இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் துபாயைச் சேர்ந்த ஃபர்ஹான் பின் லியாகத் என்ற தொழிலதிபர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இதனைப் பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும் தனது பால்யகால நண்பரான ஃபர்ஹானை நீண்டநாட்களாக கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறி வருகின்றனர். எனினும் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இதுகுறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது தவிர ’ரிவால்வர் ரீட்டா’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்களில் கீர்த்தி நடித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்