சென்னை: அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் சாதி குறித்து அழுத்தமாக பேசுகிறது. இதனை ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஜோதிகா நடித்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ராட்சசி’ படத்தை இயக்கிய சை.கவுதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். டி. இமான் இசை அமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில், அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. சுமார் 2.30 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த ட்ரெய்லர். அழுத்தமான வசனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. கிராமத்தில் நடைபெறும் சாதி அரசியல்தான் படத்தின் மைய கதை என தெரிகிறது.
» இந்து மதத்துக்கு ஆதரவாக பேசுவதால் ஆண்டுக்கு ரூ.30- 40 கோடி இழப்பு: நடிகை கங்கனா ரணாவத்
» 'உம்ரான் மாலிக் விஷயத்தில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை' - ஹைதராபாத் கேப்டன் மார்க்ரம்
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago