ரூ.200 கோடி வசூலை நெருங்கும் ‘தி கேரளா ஸ்டோரி’

By செய்திப்பிரிவு

மும்பை: பெரும் சர்ச்சைக்கு மத்தியில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் உலக அளவில் ரூ.200 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி’. இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.

வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. கடந்த வாரம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை தாண்டிய நிலையில், இப்படம் தற்போது ரூ.171 கோடி வசூலித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வெகுவிரைவில் இப்படம் ரூ.200 கோடி வசூலைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்தி பேசும் மாநிலங்களில் இப்படம் 19.87 சதவீதம் வசூல் செய்துள்ளது.

இப்படம் தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே ஓடியது. மறுநாள் இப்படத்தை திரையிட மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் மறுத்து விட்டன. இது தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் படம் பார்க்கச் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்