ரூ.10 கோடி கூட வசூலிக்காத வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘கஸ்டடி’ படம் கடந்த ஒரு வாரத்தில் ரூ.9.78 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியான படம் ‘கஸ்டடி’. இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி, ப்ரியாமணி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவரின் ‘மன்மத லீலை’ எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக ‘கஸ்டடி’யை ரசிகர்கள் எதிர்நோக்கியிருந்தனர்.

படம் கடந்த மே 12 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைத் தெரிவித்தனர். இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.4 கோடி வசூலித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘கஸ்டடி’ படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ.9.78 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பைலிங்குவல் படம் என்று விளம்பரம் செய்யப்பட்ட இப்படம் ரூ.10 கோடியை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாக சைதன்யாவின் படங்களில் இதுவே குறைந்த வசூலை ஈட்டிய படம் என சினிமா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE