அல்லு அர்ஜூன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஃபஹத் பாசிலுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’புஷ்பா: தி ரைஸ்’. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகமான இந்தப்படம் தென்னிந்தியாவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதுமட்டுமல்லாமல் வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தியது. திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு, அதன் அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்புகளையும் அதிகரித்தது. அந்த வகையில் ’புஷ்பா: தி ரூல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் ஃபஹத் பாசில் மொட்டைத்தலையுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தற்போது படத்தில் ஃபஹத் பாசில் நடிக்கும் காட்சிகளை நிறைவுபெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படத்தில் பஹத் பாசில் கதாபாத்திரத்தின் பெயர் ‘பன்வர் சிங் ஷெகாவத்’ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago