‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றம்: ரஜினி - கபில்தேவ் வைரல் புகைப்படத்தின் பின்னணி

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் உடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கபில் தேவ், “எனக்கு கிடைத்த பாக்கியம்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, நடிகர் ரஜினியை வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி, சஞ்சு சாம்சன் ஆகியோர் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், மும்பையில் இது தொடர்பான படப்பிடிப்பின்போது ரஜினியும் கபில்தேவும் இணைந்து இந்தப் புகைப்படத்தை எடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்