ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் - உறுதி செய்த மிஷ்கின்

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக நடிகர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். தன் சமீபத்திய நேர்காணலில் அவர் இதனை உறுதி செய்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அண்மையில் பேசிய நேர்காணல் ஒன்றில், “திடீரென ஒருநாள் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தில் சிறிய வில்லன் கதாபாத்திரம் இருக்கிறது நடிக்கிறீர்களா? என என்னிடம் கேட்டார். சரி என நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். விஜய் படம் எனும்போது அது எனக்கு அது டபுள் ட்ரீட். படத்தில் எனக்கு ஒரு சண்டைக்காட்சி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் ஒரு இன்ட்ரஸ்டிங்கான இயக்குநர். அடுத்து நடிகர் ரஜினிகாந்துக்காக படம் இயக்குகிறார். அது ரஜினியின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. எந்த அளவுக்கு அது உண்மை எனத் தெரியவில்லை. சினிமாவில் 50 வருடங்கள் கடந்த ரஜினிக்கு யாருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பதை நன்கு தெரியும். அப்படி லோகேஷ் கனகராஜுக்கு அமைந்திருக்கும் இந்த வாய்ப்பை உண்மையில் பெருமையான விஷயம்தான்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்