மதுரை: பருத்திவீரன் திரைப்படத்தில் ‘பிணந்தின்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த செவ்வாழை ராசு காலமானார். அவருக்கு வயது 70.
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘பருத்திவீரன்’ படத்தில் ‘பிணம் தின்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் செவ்வாழை ராசு. பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். ‘கிழக்குச் சீமையிலே’, ‘மைனா’, ‘கந்தசாமி’ உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு உடல் எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago