மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்... - டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங்' ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

டாம் குரூஸ் நடித்துள்ள ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங் பாகம் 1’ (Mission: Impossible Dead Reckoning Part 1) படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. படம் ஜூலை மாதம் 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்‌ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் அடுத்து வெளியாக உள்ள மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7-ம் பாகத்துக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த பாகத்துக்கு ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங் (பாகம் 1)’ என பெயரிடப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கியுள்ள இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டி உள்ளார் டாம் க்ரூஸ். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் ஜூலை 12-ம் தேதியும், அடுத்த பாகம் 2024-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - டாம் குருஸ் தனது டூவிலரை மலை உச்சியின் எல்லையில் நிறுத்தும்போது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ட்ரெய்லர் முழுவதும் டாம் குரூஸ் ஓடிக்கொண்டேயிருக்கிறார். சேஸிங் காட்சிகளும் அதற்கேற்ற பின்னணி இசையும் படத்தின் வேகத்தை உணர்த்துகின்றன. மலை உச்சியிலிருந்து விழும் காட்சிகள், ட்ரெய்னில் நடக்கும் சண்டைக்காட்சி என மொத்த ட்ரெய்லருமே படம் அட்டகாசமான ஆக்‌ஷனைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது. பிரமாண்டமான காட்சியமைப்பும், பின்னணி இசையும், டாம் குரூஸின் ஆக்‌ஷனும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

மேலும்