நவாசுதீன் போன்ற திறமையான நடிகர் மணிகண்டன்: இயக்குநர் பாலாஜி சக்திவேல் புகழாரம்

By செய்திப்பிரிவு

“பாலிவுட்டில் நவாசுதீன் சித்திக்கை போன்ற திறமையான நடிகர்தான் மணிகண்டன்” என்று சென்னையில் நடைபெற்ற ‘குட் நைட்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் புகழாரம் சூட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில் வெளியான படம் ‘குட் நைட்’. இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் ரெபாக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மே 12ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வை படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் கூறியது: “படத்தின் ஹீரோ மணிகண்டன் மிக துல்லியமான நடிப்பை வழங்குபவர். படப்பிடிப்பு தளத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இந்தி திரையுலகில் நவாசுதீன் சித்திக் என்ற திறமையான கலைஞர் இருக்கிறார். அவரைப் போன்ற திறமையான நடிகர்தான் மணிகண்டன்.

இவரை கண்டுபிடித்து இப்படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க வைத்த இயக்குநர் விநாயக்கை வாழ்த்துகிறேன். பிரபலமான நடிகராகவும், நட்சத்திர மதிப்புள்ள நடிகராகவும் உயர்வதற்கான அனைத்து தகுதிகளும் மணிகண்டனிடம் இருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ் திரையுலகில் இன்னும் கூடுதலான உயரத்திற்கு செல்வார் என்பது என்னுடைய நம்பிக்கை” என்று பாலாஜி சக்திவேல் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்