மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ‘புன்னகை தேசம்’ தருண் 

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தமிழில் ‘புன்னகை தேசம்’, ‘எனக்கு 20 உனக்கு 18’ படங்களின் மூலம் பிரபலமான நடிகர் தருண் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ படத்தின் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் தருண். அதன் பிறகு ’காதல் சுகமானது’, ‘புன்னகை தேசம்’, த்ரிஷாவுடன் ‘எனக்கு 20 உனக்கு 18’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே ‘சாக்லேட் பாய்’ ஆக பிரபலமானார். தெலுங்கிலும் இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. பின்னர் தொடர் தோல்விகளால் திரையுலகை விட்டு நீண்டகாலமாக ஒதுங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் வெப் சீரிஸ் ஒன்றின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் தருண். இதனை அவரது தாயாரும் நடிகையுமான ரோஜா ராஜாமணி பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். தெலுங்கில் உருவாகி வரும் ஒரு வெப் சீரிஸில் தற்போது தருண் நடித்து வருவதாகவும், இது தவிர மற்றொரு படத்திலும் அவர் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்