“என்னை நம்பியவர்களுக்காக நிச்சயம் கம்பேக் கொடுப்பேன்” என்று ‘ஏஜென்ட்’ பட தோல்வி குறித்து படத்தின் நடிகர் அகில் அக்கினேனி அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி நடித்துள்ள படம் ‘ஏஜென்ட்’. இப்படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களிலும் இப்படத்துக்கு பயங்கர ஹைப் கொடுக்கப்பட்டது.
பெரும் பொருட்செலவில் வெளியான இப்படம் முதல் நாளான கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நாடு முழுவதும் ரூ.6 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. இது தயாரிப்பு தரப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.15 கோடிக்கும் குறைவாக வசூலித்து பெரும் நஷ்டத்தை சந்தித்தது. மம்மூட்டியின் இருப்பும் கூட இப்படத்துக்கு கை கொடுக்கவில்லை என்பது சோகம்.
இந்நிலையில் ‘ஏஜென்ட்’ தோல்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் அகில் அக்கினேனி, “தங்கள் உயிரை பணயம் வைத்து ‘ஏஜென்ட்’ படத்திற்கு உயிர்கொடுத்த படக்குழுவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் எங்களின் பெஸ்டை கொடுக்க முயன்றோம். ஆனால் எதிர்பாராத விதமாக நாங்கள் நினைத்ததை திரையில் கொண்டு வர முடியவில்லை. உங்களுக்கான சிறந்த படத்தை எங்களால் கொடுக்க முடியவில்லை. எனக்கு ஆதரவளித்து துணை நின்ற படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றிகள். நீங்கள் கொடுத்த அன்பும், எனர்ஜியும் தான் என்னை தொடர்ந்து வேலையை செய்ய வைக்கிறது. என்னை நம்பியவர்களுக்காக நிச்சயம் கம்பேக் கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.
» ‘தி வாரியர்’ முதல் ‘கஸ்டடி’ வரை: தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படங்களின் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?
» ‘‘கடன் வாங்கி தானம் செய்தவர் மயில்சாமி” - நினைவேந்தல் கூட்டத்தில் கார்த்தி உருக்கம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago