கொச்சி: மலையாளத்தில் வரவேற்பை பெற்று வரும் ‘2018’ படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் புதிய படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கிறார்.
ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 2018ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்துக்குப் பிறகு ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் புதிய படம் ஒன்றில் நிவின் பாலி நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். 2014ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ஓம் சாந்தி ஒஷானா’ படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த தகவல்களை படக்குழு வெளியிட இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago