சூர்யாவின் ‘கங்குவா’ டிஜிட்டல் உரிமை ரூ.80 கோடி என தகவல்

By செய்திப்பிரிவு

சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமைத்தொகை ரூ.80 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி நடிக்கும் படம் ‘கங்குவா’. நடிகர் சூர்யாவின் 42-வது படமாக உருவாகி வரக்கூடிய இந்தக் கதை 10 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. சரித்திரக்கதையான இதில் நடிகர் சூர்யா ஐந்து விதமான தோற்றங்களில் நடிக்கிறார். இதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை ஏற்றி இருக்கிறார் சூர்யா. இந்த வீடியோவும் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்தநிலையில், ‘கங்குவா’ படம் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இந்த மொழிகளுக்கு மட்டும் அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனத்திடம் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் உரிமம் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மொழிகளுக்கான டிஜிட்டல் உரிம விற்பனை பட வெளியீடு அறிவிப்பின்போது வெளியாகும் என கூறப்படுகிறது. இன்னும் ஒருமாதத்தில் படத்தின் ஷூட்டிங் முடியும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்