“தயவு செய்து இஸ்லாமிய சகோதரர்கள் ‘ஃபர்ஹானா’ படத்தைப் பார்த்துவிட்டு அதில் குறையிருந்தால் கூறுங்கள்; திருத்திக்கொள்கிறேன். இஸ்லாமியர்களை நன்றாக சித்தரிக்கும் படங்கள் வரவேண்டும்” என ‘ஃபர்ஹானா’ படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்டேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய படத்தின் இயக்குநர், “நான் இந்த படத்தின் கதையை பரிசுத்தமான மனதுடன் தான் அணுகினேன். இதில் இம்மியளவும் நம்முடன் வாழக்கூடிய இஸ்லாமிய சகோதரர்களை தவறாக காட்டிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஏனென்றால் நான் அப்படிப்பட்ட இயக்குநர் கிடையாது. ஆனால் நேற்று ஒரு குறிப்பிடத்த திரையரங்கில் ஒரு காட்சி ரத்துசெய்யப்பட்டது. இதை சில ஊடகங்கள் தமிழ்நாடு முழுவதும் ‘ஃபர்ஹானா’ படக்காட்சிகள் ரத்து என செய்தி வெளியிட்டிருந்தனர்.
இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நல்ல படங்களைதான் இயக்குவேன் என வைராக்கியத்துடன் இருக்கிறேன். நல்ல படங்களை சமூக அக்கறையுடன் வெளியிடும் நிறுவனம் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அப்படியிருக்கும்போது தேவையற்ற சர்ச்சைகள், புரிதலில் இருக்கும் சிக்கல் காரணமாக வரும் திசை திரும்பும் முயற்சிகள் வருத்தமளிக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு வரும் படங்களில் ஆயுட்காலம் 2 முதல் 3 வாரங்கள் தான். ‘ஃபர்ஹானா’ மாதிரியான படங்கள் சராசரி பார்வையாளர்கள் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படுபவை.
இந்த படத்தின் நெருடலும் சர்ச்சையும் ஏன் வருகிறது என்றால் நான் ஒரு குறிப்பிட்ட மதத்தை தொட்டு படத்தை இயக்கிவிட்டேன் என்பதால் தான். என் சகோதர, சகோதரிகளைப்பற்றி நான் படம் எடுக்காமல் யார் எடுப்பார்கள். இஸ்லாமியர் சமூகத்தை பற்றிய நல்ல படங்கள் என்பது எனது ‘ஃபர்ஹானா’ படம் ஆரம்ப புள்ளியாக இருக்கட்டும். ஆனால் மற்ற படங்கள் வந்த நேரம் அதற்கான எதிர்மறை கருத்துகளும் என்னையும் அந்த புள்ளியில் வைத்து பார்க்கும் சூழலை உருவாக்கவிட்டது.
இஸ்லாமிய நண்பர்கள் தயவு செய்து படத்தைப்பாருங்கள். பார்த்துவிட்டு குறைகள் இருந்தால் நாங்கள் சரிசெய்ய தயாராக இருக்கிறோம். தமிழ் திரையுலகில் இனி இஸ்லாமிய சகோதரர்களை சரியாக சித்தரிக்கும் படங்கள் வர வேண்டும். அதற்கு ஆரம்பமாக ‘ஃபர்ஹானா’ இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago