6 இயக்குநர்கள்; 4 இசையமைப்பாளர்கள் | ‘மாடர்ன் லவ் - சென்னை’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மாடர்ன் லவ்’ ஆந்தாலஜி வெப் தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் - சென்னை’ தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

2019-ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற வெப் தொடர் ‘மாடர்ன் லவ்’. ஆந்தாலஜி வகையைச் சேர்ந்த இத்தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் - மும்பை’ கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இத்தொடரின் சென்னை அத்தியாயத்தின் வெளியீட்டுத் தேதியை ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடர் வரும் மே 18-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்தொடரில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்‌ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு இயக்குநர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பாடல்கள் இளையராஜா, யுகபாரதி மற்றும் பாக்கியம் சங்கரால் எழுதப்பட்டுள்ளன. இத்தொடரில் ஆறு அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன.

ட்ரெய்லர் எப்படி?: 3 நிமிடம் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரில் ஆறு அத்தியாயங்களின் காட்சித் துணுக்குகள் நமக்கு காட்டப்படுகின்றன. முதல் அத்தியாயமான ‘லாலாகுண்டா பொம்மைகள்’ பகுதியிலிருந்து சில பெரியவர்கள் ‘லாலாகுண்டா’ ஏரியாவின் பெருமைகளை சொல்வதுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. தொடர்ந்து அசோக் செல்வனின் இமைகள், ரிது வர்மாவின் ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி’, அக்‌ஷய் சுந்தரின் இயக்கத்தில் ‘மார்கழி’, பாரதிராஜாவின் ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’, தியாகராஜன் குமாரராஜாவின் ‘நினைவோ ஒரு பறவை’ ஆகிய பகுதிகளின் சிறு சிறு தொகுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன. இளையராஜாவின் குரலில் பின்னணியில் ஒலிக்கும் பாடல் மனதை வருடுகிறது. ‘இத்தனை ஆயிரம் வருஷமாகியும் நமக்கு புரியாம இருக்குறது மனுஷனோட மனசுதானப்பா’ என்று கிஷோர் பேசும் வசனம் ஈர்க்கிறது. பாசாங்கில்லாத காதல் கதைகளின் தொகுப்பாக ‘மாடர்ன் லவ் - சென்னை’ இருக்கும் என்று ட்ரெய்லரின் வழி எதிர்பார்க்க முடிகிறது.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்