அரிகொம்பன் கதை சினிமாவாகிறது

By செய்திப்பிரிவு

கேரளாவின் இடுக்கி மாவட்டம் சின்னக்கனல், சந்தன்பாறை பகுதிகளில் விளைநிலங்களில் புகுந்து அரிகொம்பன் என்ற காட்டு யானை, கடும் சேதத்தை விளைவித்தது. வீடுகள், ரேஷன் கடைகளையும் தாக்கி சேதப்படுத்தியது. 20 பேரை கொன்றுள்ள இந்த யானை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, காட்டுக்குள் விடப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் மேகமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரிகொம்பன் யானையின் நடமாட்டம் காணப்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேனி மாவட்ட வன அலுவலர் சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், இந்த யானையின் கதையை மையமாக வைத்து ‘அரிகொம்பன்’ என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படம் உருவாகிறது. சஜித் யாஹியா இயக்குகிறார். இலங்கையில் அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE