பேட்டக்காளி  இயக்குநரின் நடிப்பு பயிற்சி பட்டறை

By செய்திப்பிரிவு

கிஷோர், ஷீலா ராஜ்குமார், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்த ‘பேட்டைக்காளி’ வெப் தொடர் மூலம் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் ல.ராஜகுமார். அதற்கு முன்பு அவர், ‘அண்ணனுக்கு ஜெ’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இவர் தனது முத்தமிழ் கலைக்கூடம் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிப்பு பயிற்சி பட்டறை நடத்துகிறார். இதுபற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது:

அடுத்த படத்துக்கான வேலைகளில் இருக்கிறேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதற்கு முன்பு, நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து, சிறந்த நடிகர்களை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அதற்காக, நமது மரபு சார்ந்த நடிப்பை ஊக்குவிக்கும் விதமாக பயிற்சி பட்டறை நடத்துகிறோம். மே 19-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை சென்னை அடையாறில் உள்ள குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் இந்த பட்டறை நடக்கும். நடிப்பு நுணுக்கங்கள், நடிப்பு முறைகள், சிலம்பாட்டம், தேவராட்டம், அடவு போன்றவை கற்றுத்தரப்படும். இதன்முடிவில் பட்டறையில் பங்கேற்றவர்களைக் கொண்டு, ஒரு நாடகம் நடத்தப்படும்.

இந்த பயிற்சி பட்டறையில் பங்கு பெற 7305652926 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்